பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த வரவேற்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி தெரிவித்துள்ளார்.உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் சனிக்கிழமை வெளியிடப்பட்டு அது அனைத்து தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சனிக்கிழமை (செப். 12) இந்தியா வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.இதுதொடர்பாக டெட்ரோஸ் அதானோம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:தில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி.உலக சுகாதார நிறுவனத்துக்கு பிரிக்ஸ் தலைவர்கள் அளிக்கும் வலுவான ஆதரவு பிரகடனத்தில் பிரதிபலிக்கிறது. அந்த வகையில், அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, மீள்திறன் கொண்ட சுகாதார அமைப்புகள், பெருந்தொற்று ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்தல், காசநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள், சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், டிஜிட்டல் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவத்தை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட கருத்துகள் பிரடகடனத்தில் இடம்பெற்றிருப்பதை நான் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.Prime Minister @narendramodi, thank you for the warm welcome to the 2026 #BRICS Delhi Summit. I very much appreciate the BRICS Leaders’ strong support for @WHO and multilateralism, and the commitment, as reflected in the declaration, to universal health coverage, resilient… pic.twitter.com/YXv72HhwMM— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) September 13, 2026பிரிக்ஸ் உச்சி மாநாடு: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!World Health Organization Director-General Tedros Adhanom Ghebreyesus has thanked Prime Minister Modi for the welcome extended at the BRICS summit.