யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - கஜகஸ்தானின் எலினா ரைபகினா இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தினார்கள். இந்தப் போட்டியில் சபலென்காவை 6-4 5-7 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, முதல்முறையாக தனது யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை எலினா ரைபகினா வென்றார். ரஷ்யாவில் பிறந்த கஜகஸ்தான் வீராங்கனை முதல் செட்டில் வென்று இரண்டாவது செட்டில் தோல்வியுற்றார். இருப்பினும் தனது பொறுமையையும் நம்பிக்கையும் விடாமல் மூன்றாவது செட்டில் வென்று கோப்பையை தனதாக்கினார். முதல் செட்டை வெல்ல 44 நிமிஷங்கள் பிடித்தன. பின்னர். ஒட்டுமொத்த ஆட்டமும் 141 நிமிஷங்களில் (2 மணி நேரம் 21 நிமிஷங்கள்) முடிந்தன. யுஎஸ் ஓபனில் ஹாட்ரிக் சாம்பியனாக காத்திருந்த சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்து, தனது முதல் சாம்பியன் பட்டத்தை ரைபகினா வென்றார். இந்த வெற்றியுடன் ரைபகினா உலகின் நம்.1 வீராங்கனை என்ற இடத்தையும் பிடித்தார். யுஎஸ் ஓபன் மற்றும் நம்.1 இடத்தை சபலென்கா ஒரே போட்டியில் இழந்தார். லா லிகா: ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரபீனியா! Rybakina dethrones Sabalenka to win first US Open title, claim world no. 1 spot