பிரிக்ஸ் உச்சி மாநாடு: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

Wait 5 sec.

பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லியில் நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் அமலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று வழிப்பாதைகளை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (செப். 13) அறிவித்துள்ளது.உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளின் ஆதரவோடு பிரிக்ஸ் பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.உலகத் தலைவர்கள் தில்லியில் ஒன்றுகூடி இருப்பதால், அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாரத் மண்டபத்தை சுற்றியுள்ள சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சாலைகளில் ஒருவேளை அவசர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர ஊர்திகளோ வந்தால், அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதை உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.இருப்பினும், தில்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.மேற்காசிய போருக்கு பேச்சு மூலம் தீா்வு! பிரிக்ஸ் தில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு!With the BRICS summit underway in Delhi, the police announced traffic restrictions and alternative routes across the state on Sunday (Sept. 13).