மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 13 நிலவரம்!

Wait 5 sec.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (செப். 13) வினாடிக்கு 5,227 கன அடியாக அதிகரித்துள்ளது.நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,495 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 5,227கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.83 அடியிலிருந்து 88.52 அடியாக சரிந்தது. இதனால், அணையின் நீர் இருப்பு 50.97 டிஎம்சியாக உள்ளது.திமுகவினரின் இழிவான உரை; ஆ. ராசா பேச்சுக்கு விசிக கண்டனம்!Due to light rainfall in the Cauvery catchment areas, the inflow of water into the Mettur Dam has increased to 5,227 cubic feet per second today (Sept. 13).