என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை: ஆ. ராசா பதிவு!

Wait 5 sec.

என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை என மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஞாயிற்றுக்கிழமை (செப். 13) தெரிவித்துள்ளார்.மேலும், நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஆ. ராசா, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக ஆ. ராசா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான். என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்கேள்விக்குள்ளாக்கியதில்…— A RAJA (@dmk_raja) September 13, 2026திமுகவினரின் இழிவான உரை; ஆ. ராசா பேச்சுக்கு விசிக கண்டனம்!Lok Sabha member A. Raja stated on Sunday (Sept. 13) that he has no hesitation in withdrawing his words.