யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற விரக்தியில் அரினா சபலென்கா தனது டென்னிஸ் ராக்கெட்டை உடைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் சபலென்காவை 6-4 5-7 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, முதல்முறையாக தனது யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை எலினா ரைபகினா வென்றார்.முதல் செட்டில் தோல்வியுற்ற சபலென்கா இரண்டாவது செட்டில் கம்பேக் அளித்தார். இருப்பினும் மூன்றாவது செட்டில் ரைபகினா ஆதிக்கம் செலுத்தி 6-3 என வென்றார். இந்த விரக்தியில் சபலென்கா தனது டென்னிஸ் ராக்கெட்டை தரையில் ஓங்கி அடித்தார். பின்னர், அதனை தூக்கி எறிந்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சபலென்கா இந்தப் போட்டியில் தோல்வியுற்றதன் மூலமாக தனது நம்.1 இடத்தையும் ரைபகினாவிடம் இழந்தார். இது குறித்து சபலென்கா கூறியிருப்பதாவது: ஹாட்ரிக் வெற்றி பெற இருக்கும் சமயத்தில், கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் தோல்வியுறும்போது நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அதனால், எனது உணர்ச்சிகளை வெளியேற்றிவிட்டேன். கோபத்தை வெளியேற்றாவிட்டால் என்னால் எதுவும் பேசி இருக்க முடியாது; மேலும் என்னால் நன்றாகவும் நடத்துக்கொண்டிருக்க முடியாது. அதனால், எனது எல்லா கோப்பத்தையும் வருத்தத்தையும் வெளியே போக வேண்டுமென நினைத்தேன் என்றார். ARYNA SABALENKA ROMPIÓ SU RAQUETA luego de PERDER la FINAL del #USOpen contra ELENA RYBAKINA. pic.twitter.com/3LsmU47QPy— Deportes Al Taco (@DeportesAlTacok) September 12, 2026Aryna Sabalenka destroys racket in wild meltdown after losing US Open final