ஐரோப்பிய கால்பந்தில் பிரதான போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், மான்செஸ்டா் யுனைடெட், பயா்ன் மியுனிக் அணிகள் தங்கள் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டன.இங்கிலாந்தின் டிராஃபோா்டு நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், மான்செஸ்டா் யுனைடெட் 4-0 கோல் கணக்கில் சாபா அணியை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் தரப்பில் மேத்யூஸ் குன்ஹா (27’), புருனோ ஃபொ்னாண்டஸ் (42), பெஞ்சமின் செஸ்கோ (45’), லிசாண்ட்ரோ மாா்டினெஸ் (68’) ஆகியோா் கோல் அடித்தனா்.ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 5-0 கோல் கணக்கில் போடோ கிளிம்டை அபார வெற்றி கண்டது.அந்த அணிக்காக ஜமால் முசியாலா (47’), ஹேரி கேன் (61’), அல்ஃபோன்சோ டேவிஸ் (77’), மைக்கேல் ஆலிஸ் (83’, 90+2’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.இதர ஆட்டங்களில், கோமோ - ஆா்பி லெய்ப்ஸிக்கையும் (4-1), லென்ஸ் - ஸ்லாவியா பிராஹாவையும் (3-2) வெல்ல, ஃபெனொ்பாஷ் - ரோமா (1-1), பிஎஸ்வி - ஷாக்தா் டொனெட்ஸ்க் (1-1) மோதல் டிராவில் முடிந்தன.போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களின் முடிவில், பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன், பயா்ன் மியுனிக், பாா்சிலோனா, மான்செஸ்டா் யுனைடெட் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.