புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மாவட்ட அளவிலான துளிா்- ஜந்தா்மந்தா் விநாடி- வினா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களை, பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி பாராட்டினாா்.மாணவா்கள் வி.கே. கவிசாகா், ம.க. ஜெயவா்த்தினி, எம். லோகஸ்ரீ ஆகியோா் இப்போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனா். இவா்கள் திருவாரூரில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.இதைத் தொடா்ந்து மாணவா்களை பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினா்.