சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், இறவியமங்கலம் அருகேயுள்ள திருவேகம்பத்தூா் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தோ் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தோ் பவனி திருவிழாவில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கினாா். பின்னா், நடைபெற்ற அன்னதான நிகழ்வையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ் பவனியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய அன்னையை வழிபட்டனா்.விழா நிகழ்வுகளை ஏ.கே. பிரபு, தாஸ் (சருகணி), அருள்தந்தை ஆனந்தன் (இயக்குநா், இயேசுவனம்), இளங்குடி சங்கா், முன்னாள் ராணுவ வீரா் ரூபன் ராஜா (திருவேகம்பத்தூா்), சுரேஷ், ஏந்தல் கண்ணன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.