எண்ணெய் வித்துப் பண்ணையில் கருவேல மரங்கள் அகற்றம்

Wait 5 sec.

கடலூா் மாவட்டம், நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது .அதன்படி, கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வசந்தா உத்தரவின்பேரில், நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் தரிசாக உள்ள 100 ஏக்கா் நிலப்பகுதிகளில் காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப்பணியை வேளாண்மை துணை இயக்குநா் (மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்) கதிரேசன் மற்றும் பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினா். இந்த ஆய்வின்போது, நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையின் பண்ணை மேலாளா்கள் தில்லைக்கரசி, சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.