சிதம்பரம்: சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதால், அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சிதம்பரம் சி. கொத்தங்குடி பகுதியில் அம்பேத்கர் சிலை பாதுகாப்புடன் கூண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையை மூடியிருந்த இரும்பு கூண்டை உடைத்து தூக்கி எரிந்து, சிலையில் உள்ள அவரது கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளை சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சத்திரிய கவின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.குற்றவாளிகளை கைது செய்யும் வரை கூண்டு வைக்க விடமாட்டோம் என போலீசாரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் முன்னெசரிக்கை நடவடிக்கையாக உதவி காவல் கண்காணிப்பாளர் சத்திரிய கவின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர்களின் உறவினர்கள் தடுக்க முயற்சித்ததுடன் தற்கொலை செய்து கொள்வதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.Ambedkar statue damaged in Chidambaram: Police deployed!தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு? (செப். 14)