பட்டினம்பாக்கம் மக்கள் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாடு அரசால் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள பட்டினம்பாக்கத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையத் திட்டமும் அப்படிதான். அதேபோன்று, பட்டினம்பாக்கத்தில் 27 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் இசைவு கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விமர்சனங்கள் தொடர்பாக பேசிய அவர், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முழுமையாக முடிவடையவில்லை. தனது பயணத்தை முழுமையாக முடித்துவிட்டு முதல்வர் வரும்போதுதான் கருத்து கூற முடியும் என்றார்.இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்காற்றும். பலமுனைப் போட்டிக்கு ஜனநாயகம் இடம்கொடுக்கிறது, அதனை ஆரோக்கியமாக அணுக வேண்டும். தொடக்கத்திலிருந்தே இடதுசாரிக் கட்சிகள் ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு, நாங்கள் இணைந்தே பணியாற்றுவோம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆட்சிக்கு ஆதரவு என்பதில் ஐயமில்லை, ஆனால், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்கள். அது அவர்களுக்கான சுதந்திரம், உரிமை. மசவெ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். The Secretariat cannot be built in Pattinapakkam without the people's consent! — Thirumavalavanஅன்று அரசியலால் தாமதமான அன்னை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!