பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்: அதிகாலையிலேயே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Wait 5 sec.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர்.தமிழகம் முழுவதும் இன்று (செப். 14) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 36,000 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று அதிகாலையிலேயே வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.சிவகங்கையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற குடைவரைக் கோயிலான இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்தக் கோயிலில் மலையைக் குடைந்து 6 அடி உயரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்.இக்கோயிலில் செப். 5-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சதுர்த்தியை முன்​னிட்டு, அதி​காலை​யில் கோயில் நடைதிறக்​கப்பட்​டு, சிறப்பு பூஜைகள் நடை​பெறுகின்றன.விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துThousands of devotees queue up at Karpaga Vinayakar Temple in Pillayarpatti on the occasion of Vinayagar Chaturthi