மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, இன்று காலை வினாடிக்கு 7,598 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.32 அடியிலிருந்து 88.21 அடியாக சரிந்தது. அணையில் நீர் இருப்பு 50.63 டிஎம்சி-யாக உள்ளது.விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துWater inflow to Mettur Dam has increased to 8,618 cubic feet per second