நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியானது.இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அம்மனாக நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.இந்த நிலையில், ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ எனும் பெயரில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.மேலும், நவம்பர் 8 ஆம் தேதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 ஆம் தேதியில் மூக்குத்தி அம்மன் 2 வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழில் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மூக்குத்தி அம்மன் 2 வெளியிடப்படுகிறது.இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார்.விஜய் - த்ரிஷாவுடன் மோதும் ஜேசன் சஞ்சய்!Actress Nayanthara's Mookuthi Amman 2 teaser released