மொத ராத்திரி பட நாயகனுக்கு குவியும் வாழ்த்து!

Wait 5 sec.

மொத ராத்திரி படத்தின் நாயகன் ரிஷிகாந்த் பிறந்த நாளுக்கு, அந்தப் படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இரும்புத்திரை, ஹீரோ, ராக்கி, ஓ2 போன்ற படங்களில் சிறிய பாத்திரங்களிலும், கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்தின் கூலி படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ரிஷிகாந்த்.மேலும், இவர் மாதகம் என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சனாந்த் ஆகியோருடன் இணைந்து ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள 'டோரதி' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இதனிடையே, அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ’மொத ராத்திரி’.இந்தத் திரைப்படம் அண்மையில் ஓடிடியில் வெளியாகி, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து டிரெண்டானது.இந்நிலையில், நடிகர் ரிஷிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு 'மொத ராத்திரி' படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி உள்பட ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.Many people, including director Raja Karuppasamy, are extending their birthday wishes to Rishikanth, the lead actor of the film Motha Rathiri.மொத ராத்திரி பட இயக்குநரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்!