கும்மிடிப்பூண்டி: சிக்னல் கோளாறால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

Wait 5 sec.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கும்மிடிப்பூண்டி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி வழியே வரும் அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நடைமேடை வழியாக இயக்கப்படுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வரும் விரைவு ரயில்களும் அதே வழியில் இயக்கப்படுவதால் ரயில்கள் நிறுத்தப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்படுகின்றன. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் காலை நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். Gummidipoondi: Train services disrupted due to signal failure