மூவர் ஹாட்ரிக்: 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தி, அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.முதல் போட்டியில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து மிரட்டினார்கள். இந்தப் போட்டியில் ஜுக்ராஜ் சிங் (10', 22', 42', 53') நான்கு கோல்களை அடித்தார்; அதேவேளையில் அபிஷேக் (11', 17', 49') மற்றும் தில்ப்ரீத் சிங் (30', 38', 55') ஆகியோரும் ஹாட்ரிக் கோல்களை அடிது அசத்தினார்கள்.கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் (16', 45') இரண்டு கோல்கள் அடித்தார். இலங்கை சார்பில் சுரேஷ் ரத்நாயக்க 50ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக கோல் அடித்து வரலாறு படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்த போட்டியில் தென் கொரியா உடன் வியாழக்கிழமை மோதவிருகிறது. கடந்த 2022 ஆசிய விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. ! Relive the action as the Indian Men’s Team powered past Sri Lanka 16-1 to make it two wins from two at the Asian Games 2026! Next stop: South Korea on September 24. ⚡#HockeyIndia #IndiaKaGame #AsianGames2026… pic.twitter.com/ckDS6TUzuY— Hockey India (@TheHockeyIndia) September 22, 2026ஆசிய விளையாட்டு: இறுதிக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக்!Jugraj, Abhishek, Dilpreet's hat-tricks hand India 16-1 win over Sri Lanka