ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!

Wait 5 sec.

அமெரிக்கா தனது ராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையே கிட்டத்திட்ட 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. ஈரானும் தடையை மீறி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய்க் கப்பல்களை தாக்கி வருகின்றது.இதனால், சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழலில், ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை கடுமையாக்க போவதாக டிரம்ப் அண்மையில் மிரட்டல் விடுத்திருந்தார்.மேலும், நாளை (செப். 23) முதல் ஈரானின் விமானப் போக்குவரத்து சேவையை முடக்கப் போவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத ஈரான் அரசு உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் மற்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், அமெரிக்கா தனது ராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், விரைவில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Ready to open Hormuz if the military blockade is lifted! Iran sets condition for the US!வெள்ளை மாளிகையில் 3 ஊடகங்களுக்கு தடை! டிரம்பை புறக்கணிக்க செய்தி நிறுவனங்கள் முடிவு!