உலகத்துக்கே அதிபர் போல செயல்படுகிறார் டிரம்ப்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Wait 5 sec.

உலகத்துக்கே அதிபர் போல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி  தெரிவித்தார்.இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளையும், பொருளாதாரத் தடை அச்சுறுத்தல்களையும் குறிப்பிட்டு இது இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி பேசியதாவது:உலகத்துக்கே அதிபர் போல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்படுகிறார். எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றை யார் வாங்க வேண்டும் என்பது குறித்து அவர் நிபந்தனைகளை விதிக்கிறார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது இந்தியாவின் கண்ணியம், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மட்டுமல்ல; உலகின் பிற நாடுகளின் கண்ணியம், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தையும் பாதிக்கிறது.எனவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அப்படியொரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், நாங்கள் அதற்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்.சுயமரியாதையுள்ள எந்தவொரு நாடும் இதுபோன்ற அழுத்தங்களுக்குப் பணிந்துவ்டக்கூடது. ஏனென்றால், டிரம்ப்பின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச சட்டத்த்துக்கு எதிரானது. யாரும் இவ்வாறு நடந்துகொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.வெள்ளை மாளிகையில் 3 ஊடகங்களுக்கு தடை! டிரம்பை புறக்கணிக்க செய்தி நிறுவனங்கள் முடிவு!M.A. Baby, All India General Secretary of the Communist Party of India (Marxist) [CPI(M)], stated that US President Donald Trump acts as if he were the president of the entire world.