லா லிகா கால்பந்துத் தொடரின் தலைவர் ஜாவியர் டெபாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ரியல் மாட்ரிட் அணியினர் வேற்று கிரகத்தில் வசிக்கிறார்கள்” எனக் கேலியாகப் பேசியுள்ளார். ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ரியல் மாட்ரிட் அணி தனது பரம்பரை எதிரியான அத்லெடிகோ மாட்ரிட் உடன் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியில் 52ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரருக்கு ரெட் கார்டு தரப்பட்டது. மேலும் தோல்வியுற்றதால் அவர்கள் மிகுந்த சினத்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போட்டியில் நடுவர்களின் செயல் தங்களுக்கு உவப்பானதாக இல்லயென ரியல் மாட்ரிட் வீரர்களும் அதன் தலைமைப் பயிற்சியாளரும் பேசினார்கள். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.இது குறித்து ரியல் மாட்ரிட் பயிற்சியாளரை விமர்சித்து அத்லெடிகோ அணி தனது வலைதள பக்கத்தில், “நடுவர்கள் மீதானை தொல்லையை நிறுத்துங்கள்” என நகலெடுக்கும் விடியோவை வெளியிட்டு பதிலடி தந்தது. இந்த நிலையில், லா லிகா தொடரின் தலைவர் ஜாவியர் டெபாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரியல் மாட்ரிட் செய்தித் தொடர்பாளர்கள் தங்களது தொலைக்காட்சிகளில் மீண்டும் பழைய பாணியிலான கதையை, நிரந்தரமான சதியை தொடங்கிவிட்டார்கள். நடுவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் ரியல் மாட்ரிட் அணியினர் வேற்று கிரகத்தில் வாழ்கிறார்கள் போலிருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியிலேயே தெரியக் கூடிய போதாமைக்கு அவர்கள் சொல்லும் சாக்காக இந்தக் காரணங்கள் அமைந்துள்ளன. களத்தில் என்ன நடந்தது என்பதை விளக்காமல் ஒரு சதியைக் குறிப்பிடுவது எளிதானது. செப்டம்பர் வந்துவிட்டது, பகுத்தறிவு இருப்பவர்கள் யாரும் இனிமேலும் இந்தக் காரணங்களை யாரும் நம்பமாட்டார்கள் என்றார்.️ pic.twitter.com/mjppfgZNYU— Atlético de Madrid (@Atleti) September 21, 2026Real Madrid 'living in another galaxy' over referee claims, says La Liga chief Tebas