ஜெயிலர் - 2 படத்தின் அடுத்த பாடல் அப்டேட்!

Wait 5 sec.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படத்தின் அடுத்த பாடல் அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது.ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.அதுமட்டுமின்றி சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.முன்னதாக, இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட வெளியீட்டுத் தேதி!Update on the next song from Jailer 2!