தி பாரடைஸ் - தாயை பற்றியும்... புரட்சியைப் பற்றியும்... பேசும் திரைப்படம்.ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி, கயாது லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்திருக்கிறார்.செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.