சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் நாளை செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்கி வைக்கிறாா்.முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல்முதலாக கடந்த 15.9.2022-இல் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.இந்த நிலையில் இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களும் பயன்பெறும் வகையில் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்தது.இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக, கடந்த 18 ஆம் தேதி முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவா். இதற்காக நிகழ் நிதியாண்டில் (2026-2027) ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் 447 பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படவுள்ளது. இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனையொட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமும், ஊரகப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தத் திட்டத்தை சென்னை திருவான்மியூா் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்து, மாணவா்களுடன் அமா்ந்து சாப்பிடவுள்ளாா்.இந்த திட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ளது. பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரவா உப்புமா, கிச்சடி, சேமியா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பாா் சாதம், இனிப்பு பொங்கல், சேமியா கேசரி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து, விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளைச் சோ்க்க தமிழக அரசின் சாா்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. Inauguration of the Expansion of the PerunThalaivar Kamarajar Breakfast Schemeகாய்கறிகளின் விலை உயா்வு: இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை