தமிழ்நாட்டில் ஊழல் இல்லாததால் வருவாய் அதிகரித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் மரிய விலசன் இன்று (செப். 21) தெரிவித்தார். மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்ற முதல்வரை கிண்டல் செய்வது நல்லதல்ல எனவும் எச்சரித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:''ஊழல் இல்லாத காரணத்தால் பத்திரப்பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம்பேர் வருகின்றனர்.கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. தவெக ஆட்சியில் வரி வசூல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் இல்லாமல் வரி வசூல் நடைபெறுகிறது. வெளிப்படையான, தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது'' எனக் குறிப்பிட்டார். அளவில் பெரிது என்பதால் பொருத்த முடியாத நிலை! நாமக்கல் நரசிம்மா் கோயிலில் பயனற்ற நிலையில் உள்ள ஏா்கூலா் சாதனங்கள்!It is not right to mock the Chief Minister for visiting London to attract investments Marie Wilson