கனடாவில் விமானப் பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலியானதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பலியாகினர். இவர்களின் மறைவுக்கு வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய துணைத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், இந்தக் கடினமான நேரத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்தம் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகக் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்துத் தூதரக உதவிகளையும் வழங்க தயாராக உள்ளளோம். மறைந்த ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Two Indian students have been killed in a tragic air accident in Canada during their flight training, the Indian mission has said.தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் (செப்.21)