‘டிஎன் சிஎம் 2031’ என்ற பதிவெண் கொண்ட காரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பயணம் செய்தார்.சென்னை, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் படப்பிடிப்புக்காக திருமாவளவன் வருகை தந்த "TN 07 CM 2031" பதிவெண் கொண்ட டெஸ்லா கார் தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட விசிக 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், பின்னர், அக்கூட்டணியிலிருந்து விலகி தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தது.தவெக அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற்ற நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக இணைந்தது.மசவெகூயில் காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்தது. இந்த கூட்டணி முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. CM 2031! Thirumavalavan's car registration number draws attention!ஏஐ விளம்பரம்! ரூ. 14 லட்சத்துக்கு முகத்தை விற்கும் சீன மக்கள்!