பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? கேள்வி எழுப்பியிருப்பது யார்?

Wait 5 sec.

சமூக வலைத்தளங்களில், எதிர்கருத்து பதிவிடுபவர்களுக்கு எதிராக ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், அதனை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, அரசியலில் இருந்து ஒதுங்கி, தொலைக்காட்சி வாய்ப்புக் கேட்டது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ஸ்மிருதி இராணி.தற்போது, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், வெளியிட்டிருக்கும் பதிவில், கருத்துச் சுதந்திரம் என்பது, மற்றவர்களை துன்புறுத்தும் ஆயுதமாக மாற்றிக் கொள்ளக் கூடாது. தற்போது பலரது குரலையும் அறிந்து கொள்ளும் ஒரு வழியாக சமூக வலைத்தளங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், மற்றொருபக்கம், யாரையும் துன்புறுத்தும் வகையில் இந்த கருத்துச் சுதந்திரம் இருந்துவிடக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.பொது வாழ்வில் இருப்பவர்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் எதிர்மறைக் கருத்துகளை எதிர்கொள்ளும்போது, இதனை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள். அது உண்மைதானா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.பொது வாழ்வில் வருவது என்பது, எங்களது சுய மரியாதையை இழந்துவிடுவது என்பது அர்த்தமாகுமா? என்றும் பதிவிட்டுள்ளார்.ஒரு சில நொடிகளில் டைப் செய்து வெளியிடப்படும் கருத்துகள், பலரது வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை யாரும் உணர்வதில்லை.கருணையோடு நடந்து கொள்ளுங்கள், அது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல ஆனால், அது பல நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிறைவாக பதிவு செய்திருக்கிறார்.