கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கேரளத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழையால் இடுக்கி மாவட்டத்தில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த வீடு இடிந்தது. வீட்டின் இடிபாடுகளில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.மேலும், சுற்றுலாவுக்காக கேரளம் சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த பெண் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மதியம் வரை பெய்த மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், கேரளத்தின் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாகிறது! Heavy rains in Kerala! – 6 dead; yellow alert today