தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.திருவேட்டநல்லூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன்(69). விவசாயி. இவா் விவசாய நிலத்தில் பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் புதன்கிழமை மயங்கி கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு புளியங்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வியாழக்கிழமை அவா் இறந்தாா். சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.