சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளியை மதுப் புட்டியால் தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி நாகராஜன் (42). இவா் சிவகாசி கவிதாநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சரஸ்வதி பாளையத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி (39) , நாகராஜனிடம் இருந்த மதுப் புட்டியைப் பறித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடந்து , தங்கப்பாண்டி, நாகராஜனை மதுப் புட்டியால் தலையில் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்தனா்.