ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் பவுன் ரூ.2,280 குறைந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த செப்.21-இல் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும், செப்.22-இல் பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும், செப்.23-இல் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கும் விற்பனையானது.இதையடுத்து, வியாழக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் விலை பவுனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது.