மோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.66 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு மாலை 5.10 மணிக்கு வந்த பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. மேலும், 64 பயணிகளுடன் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கு மாலை 5.30 மணிக்குச் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டதாக புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் ராஜசேகரன் ரெட்டி தெரிவித்தாா்.