சென்னை விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் நவ. 18-ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-இன்கீழ் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசா் கற்றை விளக்குகளைப் பாய்ச்சுதல், வெப்பக் காற்று பலூன்கள், கயிற்றால் கட்டப்பட்ட பலூன்கள், ஒளியை வெளிப்படுத்தும் பொருள்கள், மிதவை விமானங்கள் மற்றும் பிற பறக்கும் பொருள்களைப் பறக்கவிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு கடந்த செப். 20 முதல் நவ. 18-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.