புதுதில்லி: அதிகரித்து வரும் செலவு உள்ளிட்டவையால், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் விலை உயர்வை குறித்து ஆலோசித்து வருவதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா இன்று தெரிவித்தார்.மூலப்பொருள் விலை உயர்வு கணிசமான பகுதியை நாங்கள் ஏற்றுக்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் துரிதப்படுத்தியுள்ளோம்.இதற்கிடையில், அக்டோபர் 1 முதல் வணிக வாகனப் பிரிவுகளில் 1 சதவீதம் வரை விலை உயர்வை டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட விலை உயர்வு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில் தேவைக்கு ஏற்ப விநியோகம் சற்று குறைவாக இருப்பதால் வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் தள்ளுபடியும் குறைந்துள்ளன.மூலப்பொருள் விலை உயர்வுக்கு ஏற்ப அதே வேகத்தில் விலையை உயர்த்த முடியாத நிலையும், லாப வரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் செலவைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சந்திரா தெரிவித்தார். விலை உயர்வு ஏற்படும் அதே வேகத்தில் அதைச் சந்தைக்குக் கடத்துவது சாத்தியமில்லை. இது கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது.விநியோகம், உற்பத்தி சார்ந்த பெரிய சிக்கல்கள் ஏதுமில்லை என்றும், அதே சமயம் மூலப்பொருட்களின் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், டாடா மோட்டார்ஸ் இன்று முற்றிலும் புதிய 'டாடா ஏரிஸ்' காரை அறிமுகப்படுத்தியது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காகக் கார் வாங்குபவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த 'காம்பாக்ட் செடான்' ரக காரின் ஆரம்ப விலை (எக்ஸ்-ஷோரூம்) பெட்ரோல் மாடல் ரூ. 5.29 லட்சமாகவும், ஐ-சிஎன்ஜி (iCNG) மாடல் ரூ. 6.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Tata Motors Passenger Vehicles Managing Director Shailesh Chandra on Friday said the company is weighing further price increase.வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியின் பாதையில் இந்திய பங்குச் சந்தை!