ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு தொடரில் விளையாடுவதும் மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. அதன் பின், டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு தொடரில் விளையாடுவதும் மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு தொடரில் விளையாடுவதும் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். அதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால், சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரசிகர்கள் முன்னிலையில் விளையாடவுள்ளதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க அணி, அதன் பின் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.South Africa head coach Shukri Conrad has stated that playing any series against Australia is extremely challenging.24 ஆண்டுகளாக இந்திய அணியின் ஆதிக்கம்; சவாலை எதிர்கொள்ள மே.இ.தீவுகள் தயாரா?