தில்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம்! மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் கைது!

Wait 5 sec.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா கைது செய்யப்பட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்துக்கு எதிராகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டவிரோதமாகத் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று (செப். 25) நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை அங்கிருந்து கலைக்க முயன்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்து, அவர்களை போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி வரும் அக்.2 ஆம் தேதி முதல் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்!Neha Bora, President of the AISA, has been arrested during a protest in Delhi demanding the resignation of CEC Gyanesh Kumar.