மதுரையில் பூஜை நிகழ்வுடன் படப்பிடிப்பு தொடங்கியது.பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என வலுவான நட்சத்திரக் கூட்டணி, தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் 'D56'.தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை 'லப்பர் பந்து' மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.தனுஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கும் இப்படத்தில், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.தனுஷ் நடிப்பில் தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் சார் என்ற படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் - சாய் சௌஜன்யா நிறுவனம் தயாரித்து பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.