தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!

Wait 5 sec.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி கட்சித் தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். இதன்படி, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உள்பட 15 பேருக்கு துணைப் பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, எஸ். வளர்மதி ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எம்.சி. சம்பத், ராதாகிருஷ்ணன், சிவபதி, வைகைச்செல்வன் ஆகியோருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் புதிதாக உருவாக்கி அதன் செயலாளராக முன்னாள் எம்.பி. மற்றும் எம்எல்ஏவுமான சி மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தலைவர் விஜயின் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச்செயலர் என். ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து தங்களது பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரசாரம்! தங்கை மரகதம் குமரவேலுக்கு வாக்களியுங்கள்! முதல்வர் விஜய் - நேரலைParty leader and Chief Minister Vijay has announced the allocation of responsibilities to those who left AIADMK and joined TVK.