மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் - நேரலை

Wait 5 sec.

யாருக்கெல்லாம் அனுமதி இல்லை?கா்ப்பிணிகள், சிறுவா் - சிறுமியா், மாணவ - மாணவியா், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவா்கள் உள்ளிட்டவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என தவெக பொதுச் செயலரும் அமைச்சருமான என். ஆனந்த் தெரிவித்துள்ளாா்.5,000 பேருக்கு அனுமதிகாவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பிரசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. க்யூஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 போ் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்.சாலை வழியாக செல்லும் முதல்வர்மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேச முதல்வா் விஜய் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், ஈசூா்-பூதூா், மதுராந்தகம் வழியாக அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள ஆத்தூா் சுங்கச்சாவடி வந்து மைதான கூட்டரங்கை அடைகிறாா்.இன்று மாலை பிரசாரம்மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (செப். 25) பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.