தனுஷ் 56 படப்பிடிப்பு! மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் தொடக்கம்!

Wait 5 sec.

நடிகர் தனுஷின் 56-வது திரைப்பட படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது.நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நடிகர் மம்மூட்டியும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூரியா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் மிகப் பிரம்மாண்டமாக இன்று காலை தொடங்கியது.இந்த பூஜையில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.மாரநாடு கருப்பணசாமி கோயிலில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான தனுஷின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.மேலும், தனுஷின் ரசிகர்களுக்கு சுடச்சுடக் கறி விருந்தும் கருப்பணசாமி கோயிலில் தயாராகி வருகின்றது.தனுஷ் 56 படத்துக்கு படையல் எனப் பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.'Dhanush 56' filming begins with a puja at the Maranadu Karuppanasamy Temple!விஜய் சேதுபதியின் பத்தா பட டிரைலர்!