ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வழக்கு நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் பல முக்கிய பெரும்புள்ளிகள் சிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.மேலும், இந்த வழக்கில் பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.4 பேர் கொண்ட இந்தக் குழு முற்றிலும் பெண் அதிகாரிகள் கொண்ட குழுவாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.மேலும், சென்னை காவல் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இந்தக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஏடிஜிபி அருண், ஐஜிபி கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைSpecial Investigation Team formed in Gem Veeramani sexual offense case