மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு! மின் உற்பத்தி பாதிப்பு!

Wait 5 sec.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் தினசரி 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 840 மெகா வாட் அனல் மின் நிலையத்தில் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாய்லர் டியூப் பகுதியில் ஏற்பட்டுள்ள பழுதை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். இன்று மாலை பணிகள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 5 நாள்களுக்கு முன்பு 2-வது அலகில் பாய்லர் டியூப் பழுது ஏற்பட்டுச் சரி செய்த நிலையில் இன்று மீண்டும் 1-வது அலகில் பழுது ஏற்பட்டுள்ளது.மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் மின் உற்பத்தி அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.எதிர்பாராத யோகமும் வெற்றியும்... இந்த வார ராசி பலன்கள் (செப். 25 - அக். 1)