மணிப்பூரில் குண்டு காயங்களுடன் 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம், காம்ஜோங் மாவட்டத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் நான்கு ஆண்களின் சடலங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டன. மியான்மரைச் சேர்ந்த தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பலியானவர்கள் வாரிஷிம் ஜாஜோ, பாமி ஜாஜோ, பெட்டர்சன் ஜாஜோ மற்றும் நிங்தெம் கஷக் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்கூல் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்கள் கூராய்வுக்காக காம்ஜோங் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் போலீஸார் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவி, வியாழக்கிழமை ஐந்து கிராம மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.அவர்களில் ஒருவர் தப்பித்துச் சென்று உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார் என்று காவல் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த படுகொலைக்கு முதவ்லர் யும்நாம் கெம்சந்த் சிங் கண்டனம் தெரிவித்துள்ளர். இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை என்றும் இவை ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, மியான்மர் குகி தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான் இதற்குக் காரணம் என நாகா மக்கள் முன்னணியின் மாநிலத் தலைவர் அவாங்போ நியூமாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. Bullet-ridden bodies of four men were recovered from Manipur's Kamjong district in the early hours of Friday, with police suspecting that militants from neighbouring Myanmar were behind the killings.அமெரிக்கா: கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு!