ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Wait 5 sec.

ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி பாதுகாப்பு காரணங்களுக்காக காணொளி மூலம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை அக்.9ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.The Chennai POCSO Special Court has ordered the extension of Gem Veeramani's judicial custody until October 9.மதுராந்தகம் இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயண விபரம்!