நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்பட பாடல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘ஃபுல் மூன்... ஃபுல் சன்..’ பாடலை வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைப்பில் ஹெய்சன்பெர்க் மற்றும் சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத்தே பாடியுள்ளார். A song from actor Rajinikanth's film Jailer 2 has been released.