பால் அல்லாத மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு பனீர் என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட வரைவு விதிமுறை இணையத்தில் வைரலாகியுள்ளது.செயற்கையாக தயாரிக்கப்படும் பனீர் மற்றும் சீஸ் பொருள்கள், நுகர்வோரை தவறாக வழிநடத்துவதை தடுக்கும் நோக்கில், ஒருவர் வாங்கும் பொருளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த அறிவிப்பை இந்திய உணவுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையம் கூறியிருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளது.ஆனால், இந்த அறிவிப்பு உணவு வணிகத்தில் உள்ள நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றை வெகுவாக பாதிக்கும் என்றும், அவர்கள் பாலில் தயாரிக்கப்பட்ட பனீர் அல்லது சீஸ் என்று விளம்பரப்படுத்தும் நிலை ஏற்படும் எனக் கூறப்பட்டது.இந்திய உணவுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஜித் புன்ஹானி, செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியிட்ட 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகள்) திருத்த விதிகள், 2026, உண்மையில் செயற்கையாக தயாரிக்கப்படும் பனீர் மற்றும் சீஸ் போன்றவற்றுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கவில்லை; மாறாக, பால் அல்லாத பிற பொருள்களால் ஆன என்ற பிரிவின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகள், தங்கள் பெயர், லேபிளிங் அல்லது சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் பனீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை மட்டுமே இவை தடை செய்கின்றன என்று கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.இந்த வரைவு அறிக்கை மீது மக்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு 60 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.