ஜப்பானுக்கு எதிரான டி20-ல் இந்தியா பேட்டிங்.. மழையால் 5 ஓவர்களாக குறைப்பு!

Wait 5 sec.

ஜப்பானுக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய அணி, இந்தியா - ஜப்பான் இடையேயான 75 ஆண்டுகால நட்பைப் போற்றும் வகையில் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இந்தப் போட்டி காண்டோவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் திடலில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை பெய்ததால் போட்டி தாமதமானது. காலை 11.45 வரை மழை தொடர்ந்ததால், ஆட்டத்தின் 20 ஓவர்கள் 5 ஓவர்களாக குறைப்பட்டன.அதைத்தொடர்ந்து டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியிலும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இந்திய அணி விவரம்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.ஜப்பான் அணி விவரம்: லாச்லான் யமமோட்டோ, ரியோ சகுரானோ, கெண்டல் கடோவாக்கி (கேப்டன்), பெஞ்சமின் இடோ, வட்டாரு மியாவ்ச்சி, அலெக்சாண்டர் ஷிராய் (விக்கெட் கீப்பர்), சார்லி ஹரா, இப்ராஹிம் டகாஹாசி, டெக்லான் சுசூகி, மகோடோ தனியமா, ஷோமா சுகாயா.shreyas iyer has won the toss and opt to bat. Only five overs per side due to delay because of a wet outfield. But, some action finally underway in the historic T20I match in Sano