மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட ஹாஃப் திரைப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் கவனம் பெற்றுள்ளது. சம்ஜாத் பி. எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF) வழங்கும் 'மிட்நைட் மேட்னஸ்' (Midnight Madness) பிரிவில் திரையிடப்பட்டு மலையாள சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த பிரிவில் தேர்வாகி திரையிடப்பட்ட முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை 'ஹாஃப்' பெற்றுள்ளது. திரையரங்கில் படம் திரையிடப்பட்ட தருணம் முதல், அதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல் (Q&A) வரை பார்வையாளர்கள் வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.'ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்' (Fragrant Nature Film Creations) பேனரில் ஆன் சஜீவ் மற்றும் பி. கே. சஜீவ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், தீவிரமான கதைக்களத்தில் வழக்கத்திற்கு மாறான காட்சி அமைப்பினால் சர்வதேச பார்வையாளர்களைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. திரையிடலுக்கு பிறகு நடைபெற்ற கேள்வி - பதில் அமர்வில், இயக்குநர் சம்ஜாத், தயாரிப்பாளர்கள் ஆன் சஜீவ் & பி.கே. சஜீவ், முதன்மை நடிகர்கள் ரஞ்சித் சஜீவ் & ஐஸ்வர்யா ராஜ், இசையமைப்பாளர் மிதுன் முகுந்தன் மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படம் விரைவில் இந்தியத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதிகரிக்கும் விவாகரத்துகளுக்கு இதெல்லாம் காரணங்கள்: காஜல் அகர்வால்The Malayalam film Half has garnered attention at the Toronto Film Festival.