புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளா்ச்சி குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை செப். 29-ஆம் தேதி தில்லியில் சந்தித்து பேச உள்ளதாக மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். இது குறித்து அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு வேறொரு நிகழ்வுக்காக அண்மையில் வந்திருந்தாா். அதனால் புதுச்சேரி யூனியன் பிரதேச வளா்ச்சி தொடா்பாக அவரிடம் கோரிக்கை வைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. செப். 29-ஆம் தேதி தில்லி செல்கிறேன். அன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாக அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தாா் வி.பி.ராமலிங்கம்.